“Festival For Forest” "Nakkubetta Foundation"
"வனம் காக்கும் திருவிழா"
இயற்கையை காக்க , சுற்றுசூழலை பாதுகாக்க காடுகளை காப்பது நமது கடமை. மரங்களை வளர்ப்பது நமது பொறுப்பு என்பதனை எடுத்துக்காட்டும் விதமாக “Nakkubetta Foundation”சார்பாக ஒரு மிகப்பெரிய திருவிழா அதாவது சுமார் 2000 ற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் விழா வரும் 13-11-2022 ஞாயற்றுக்கிழமை Kagguchi கிராமத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த திருவிழாவினை Nakkubetta Foundation உடன் Providence College Coonoor மற்றும் Isha Yoga Center, The Nilgiris, ம் இணைந்து செயல்படுத்த இருக்கிறார்கள்.
இதுபற்றி Nakkubetta Foundation ன் Founder Mr. N.N.Ramakrishnan அவர்களிடம் கேட்கும்போது …
ஆம் காடுகளை பாதுகாக்க, மேலும் வளர்க்க, இயற்கையை பேணி பாதுகாத்திடவே இத்தகைய திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது நமது சமூகத்திற்கு, அடுத்த தலைமுறையினருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை உள்ளது என்றும் இது ஒரு சமூக பணி என்பதனால் அனைவரையும் தனி தனியாக அழைக்க முடியாத சூழலில் அனைவரும் திரளாக வந்து இந்த நிகழ்வை சிறப்பிக்க எங்கள் மூலமாக கூட அழைப்பு விடுப்பதாக கூறினார்கள்.
இந்த முக்கிய நிகழ்ச்சியில் தமிழக வனத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர், ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் ,மாவட்ட வன அதிகாரி, மற்றும் பல அதிகாரிகள், கக்குச்சி ஊர்த்தலைவர் உட்பட மேலும் பல சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.
பல வருடங்களாக பல,பல சமூக பணிகளில் ஈடுபட்டுவரும் Nakkubetta Foundation ன் இந்த பெரும் முயற்சிக்கு NammaNilgiris.org ன் சார்பாக சிறப்பான வாழ்த்துக்களையும், நன்றிகளையும் உரித்தாக்கி கொள்வதில் பெருமிதம் அடைகிறோம்.
மேலும் அவர்கள் தொடர்ந்து இது போன்ற பல பல சமுதாய பணிகளை செய்வதற்கும் வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறோம்.
Commentaires