top of page

Happy Children's Day..... NammaNilgiris.org

எப்படி வளர்க்க போகிறோம் நம் குழந்தைகளை?





அன்பு செல்ல குழந்தை செல்வங்களுக்கு NammaNilgiris.org ன் சார்பாக இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளில் பொதுவாகவே நேருஜி அவர்களையே நினைப்போம், அவரைப்பற்றிய பதிவுகளே இருக்கும்.

அதுத்தான் இயல்பானதும் கூட...


ஆனால் இன்றைய தினத்தில் நேருவின் அனுமதியோடு குழந்தைகளுக்கு அதிகம் பிடித்த, குழந்தை செல்வங்களின் மேல் அதிக பாசம் கொண்ட அய்யா அப்துல்கலாம் அவர்களைப் பற்றி மனதில் தோன்றும் சில கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகிறேன்.

குழந்தைகளுக்கு நாம் இருவேறு உணர்ச்சிகளை, நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஊக்குவிக்க முடியும்.

எப்படி?

சற்று விளக்கமாக....



நம்மில் பல பேர் பல சந்தர்ப்பங்களில் ஐய்யா அப்துல்கலாம் அவர்களின் நினைவிடம் சென்றிருப்போம்.

அங்கு சென்று வரும் நம்மில் பலருக்கும் பலவிதமான எண்ண ஓட்டங்கள் இருக்கும்.

குறிப்பாக சிலர் அங்கு செல்லும்போது இங்குத்தான் 2020 ல் இந்தியா வல்லரசாகும் என்று கனவு கண்ட, நம்மையும் கனவு காண சொன்ன அய்யா அவர்களின் எண்ணம் முடிவடைந்து இங்கே உறங்குகிறார்கள் என்று சிலர் எண்ணக்கூடும்.


ஆனால் இன்னும் சிலர் அதே இராமேஷ்வரத்தில் எழுந்துநின்று திரும்பி கடலை பார்த்து, பின்பு இமயத்தை நினைத்து,

அய்யா அவர்கள் இந்த சிறிய கிராமத்தில்தான் பிறந்து வளர்ந்து, அரசுப்பள்ளியில் படித்து பின்பு பலபல பட்டங்கல் பெற்று பல நாட்டுதலைவர்களே வியக்கும் வண்ணம் பல சாதனைகளை செய்தார். நாட்டின் உயரிய பதவியான குடியரசு தலைவராகவும் இருந்தார்.


அவர் கூறிய 2020 என்ற எண்ணில் வேண்டுமானால் மாற்றம் இருக்கலாம்.

2025, 2030 இல்லை என்றால் 2040 ல் கூட இருக்கலாம். ஆனால் நமது இந்திய எல்லா துறையிலும் முன்னேறி வலுவாக வளர்ந்து நிச்சயம் வல்லரசாக மாறும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.


அது உங்களை போன்ற குழந்தைகளால் மட்டுமே நிறைவேற்ற முடியும் என்பதனை சொல்லி சொல்லி வளர்க்க வேண்டியது நமது பொறுப்பு என்று நம்புகிறோம்.


மேலும் அவர் சொல்லி சென்ற, விட்டு சென்ற பல பணிகளை பலரும் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் வருகிறாரகள்.


பல இலட்சம் மரக்கன்றுகள் நடவேண்டும் என்று வலியுறித்தியதன் அடிப்படையில் மறைந்த நடிகர் விவேக் அவர்கள் கூட தான் இருக்கும் வரையில் தன்னால் முடிந்த அளவுக்கு அவர் கூறியவாறு பல்லாயிரம் மரக்கன்றுகளை நட்டு சென்றார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அவர் நம்மைவிட்டு பிரிந்தாலும், மறைந்தாலும் அவர் விட்டு சென்ற பணியினை அவர்கள் நண்பர்கள் உட்பட பலரும் தொடர்ந்து செய்துக்கொண்டு தான் வருகிறார்கள்.


அழகான இந்த பிரப்பஞ்சத்திற்கு, இயற்கைக்கு, இந்த உலகிற்கு நாம் என்ன கைமாறு செய்ய போகிறோம்?

எதனை எப்படி விட்டு செல்கிறோம் நமது அடுத்த தலைமுறைக்கு?

தண்ணிரை, காற்றை எப்படி மாசுப்படாமல் நம் அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்கிறோம்? என்று பல கேள்விகளை அவர்களிடம் கேட்டு அதற்கேற்ப வாழ, செயல்பட துணை நிற்போம்.


Vijay

NammaNilgiris.org

16 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page