ஜெ .எஸ்.எஸ் கலுலூரியில் மனித விலங்குகள் உறவு விழிப்புணர்வு வாரவிழா
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2 வது வாரத்தில் மனித விலங்குகள் உறவு விழிப்புணர்வு வாரம் கொண்டாடப்படும். ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரியின் மருந்தியல் துறை மற்றும் இந்திய மருந்தியல் சங்கம், நீலகிரி உள்ளூர் கிளை ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
மருந்தியல் துறை பேராசிரியர் மற்றும் துறை தலைவர் பிரவீன் வரவேற்றார். பேராசிரியர் டாக்டர்.பி.ஆர். ஆனந்த்விஜயகுமார் நிகழ்ச்சியை தொடக்கத்தை விளக்கினார்
. ஆய்வக விலங்குகளை கையாளும் நுட்பம் நெறிமுறைகள் மற்றும் உரிமைகள், விலங்குகள் சோதனை, விலங்கு மனித உறவுகள் மேன்படுவதில் மனிதனின் பங்கு என்ற தலைப்பில் விவாதம், மின் வரைகலை சுவரொட்டி தயாரித்தல் மற்றும் கட்டுரைப் போட்டி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
பேராசிரியர் மற்றும் இந்திய மருந்து சங்கம், நீலகிரி வட்டார கிளை தலைவர் டாக்டர் ஆர்.வடிவேலன் நன்றி கூறினார்.
Thank you Tamil Venkatesh
Comments