KBTL Foundation, Kumaran Bojan Touching Lives.
- Vijay C
- Jan 18, 2023
- 2 min read

Kumaran Bojan Touching Lives..…/ Kindness Bound To Love
ஆம் பல இதயங்களின், உயிர்களின் உணர்வோடு கலந்துள்ள ஒரு உண்ணதமான தன்னார்வ தொண்டுநிறுவனம்தான் KBTL....…
தன்னலமற்ற பொதுசேவை, மிகுந்த ஈடுபாடு, தொடர்ந்து, இடைவெளி இல்லாமல், ஓய்வில்லாமல் சேவை புரிவது, ஆதரவில்லாதவர்களை தன குடும்ப உறவுகள் போல பராமரித்தல் இது போன்ற இன்னும் பல குணங்களை, சிறப்புகளை கொண்டது தான் KBTL Foundation…
வருமுன் காப்போம் (Varumun Kappom)
பெற்றால்தான் பிள்ளையா (Petralthan Pillaiya)
கை கொடுக்கும் கை (Kai kodukkum kai)
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் (Yam petra inbam Perugaa Ivvaiyagam)
அழகிய தமிழ் பெயர்கள், தலைப்புகளை படித்த உடனே அதன் நோக்கம், செயலாக்கம் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.........

"வருமுன் காப்போம்" மூலமாக ஆரோக்யமாக வாழ்வதற்கு, அதுவும் கிராமபுறங்களில், மலைபிரதேச கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கான மருத்துவ உதவி, ஆலோசனைகள், அவசியம், பரிசோதனைகள், மேலும் தங்களால் முடிந்த உதவி.....
காரணம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், என்பதை பலருக்கும் உணர செய்து, அதற்கான வழிமுறைகளை மிக எளிதாக அனைவருக்கும் விளக்கி,
அவ்வாறு ஏதெனும் நோய்கள் ஏற்பட்டால் அதனை எவ்வாறு குணப்படுத்தி கொள்ள வேண்டும் போன்ற தகவல்களை முக்கியமாக மலை கிராம மக்களுக்கு எடுத்துரைத்தல், வழிகாட்டுதல்
இதுவரை சுமார் 78 க்கும் மேற்பட்ட Heath Camps........
"பெற்றால்தான் பிள்ளையா" மூலமாக
மாற்றுதிறன் குழந்தைகளின்மேல் தனி கவனம் செலுத்தி, குறைப்பாடோடுள்ள குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் செய்வது மட்டுமல்லாமல் அவர்களின் மற்ற திறன்களை நன்கு அறிந்த அவர்களை அந்த துறையில் திறன்பட செயல்புரிய அனைத்து முயற்ச்சிகளை முன்னெடுப்பது......இதுவரையில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாற்றுதிறன் குழந்தைகளுக்கு உதவி....

"பெற்றால்தான் பிள்ளையா" மூலமாக
மாற்றுதிறன் குழந்தைகளின்மேல் தனி கவனம் செலுத்தி, குறைப்பாடோடுள்ள குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் செய்வது மட்டுமல்லாமல் அவர்களின் மற்ற திறன்களை நன்கு அறிந்த அவர்களை அந்த துறையில் திறன்பட செயல்புரிய அனைத்து முயற்ச்சிகளை முன்னெடுப்பது......இதுவரையில் சுமார் 350க்கும் மேற்பட்ட மாற்றுதிறன் குழந்தைகளுக்கு உதவி....
"யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்"
வாழ்க்கையில் நமக்கு கிடைத்திருக்கும், கிடைக்கும் மகிழ்ச்சி, அன்பு, செல்வம், வசதிகள் அது கிடைக்கபெறாமல், கிடைக்காதா என்று ஏங்கும் பலரையும் கண்டறிந்து அவர்களுக்கும் இது அனைத்தும் கிடைக்க முயற்ச்சிப்பது, அதற்காக தங்களால் முடிந்த சேவைகளை செயல்படுத்துவது...
ஆம் இதுபோன்ற முக்கியமான சேவைகளைத்தான் திரு குமரன் மற்றும் போஜன் அவர்களினால் உருவாக்கபட்ட KBTL Foundation (Kumaran Bojan Touching Lives) )
என்ற தன்னார்வ அமைப்பு பல ஆண்டுகாலமாக தொடர்ந்து , மிக சிறப்பாக செய்துக்கொண்டிருக்கிறது
நமது மாவட்டத்தில் பல தன்னார்வர்கள், தொண்டுநிறுவனங்கள் சிறப்பாக தங்கள் சேவைகளை செயல்படுத்தி வருகின்றன. ஆனால் KBTL போன்ற சில தொண்டுநிறுவனங்கள் மட்டுமே இடைவெளியே இல்லாமல், எந்தவிதமான தடைகளும் இன்றி இல்லாதவர்களுக்கு, இயலாதவர்களுக்கு திறம்பட செயலாற்றி வருகிறது.
சேவை செய்வது பல வகை, நேரிடியாக தேவைபடுபவர்களுக்கு தக்க சமயத்தில் உதவுவது, சேவை புரிபவர்களுக்கு உறுதுணையாக செயல்படுவது, சேவை செய்யும் பணிக்கு தங்களால் முடிந்த பணமாகவோ, பொருளாகவோ கொடுத்து தங்கள் பங்களிப்பை தருவது..... எப்படி செய்தாலும் அது மகத்தானது.
நாம் செய்யும் சிறு உதவிகூட நன்றிணைக்கப்படும்போது அது தேவைப்படுபவர்களுக்கு.அந்த சமயத்தில் பேருதவியாக நிச்சயம் இருக்கும்.

நம்மால் முடிந்தவரை நாமும் அவர்களுக்கு துணை நின்று மேலும் சிறப்பாக செயல்பட்டு மாவட்டத்தில் பலருக்கும் தொண்டாற்ற உதவி செய்வோம்.
ஆம் நிச்சயம் Namma Nilgiris Development Organizations அதற்கு நிச்சயம் துணை நிற்கும்.
Comments