நீலகிரி மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாத 4098 பேருக்கு கற்றல் பயிற்சி வகுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நீலகிரி ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாத 4098 பேருக்கு கற்றல் பயிற்சி வகுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தேசிய கல்விக் கொள்கை-2020 பரிந்துரைப்படி, வயது வந்தோருக்கான 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், இந்தியாவில் 15 வயதுக்கு தாண்டிய கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தேசிய தகவல் மையம், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம், தேசிய திறந்தவெளி பள்ளி ஆகியவற்றுடன் இணைந்து 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் கல்வி முறை உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களும் உள்ளன. 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்துக்கான செலவினம் ரூ.1,038 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது. அந்த வகையில், தமிழகத்திலும் பள்ளிக்கல்வித் துறை மூலமாக 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம்' செயல்படுத்தப்படுகிறது.
Thank you Daily Thanthi.
Comments