top of page

marathon-competition-in-ooty-to-eradicate-drug-addiction-


போதை பழக்கத்தை ஒழிப்பது குறித்து ஊட்டியில் மாரத்தான் போட்டி நீலகிரி ஊட்டி தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு நேற்று நீலகிரி மாவட்டம் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் ஊட்டியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் ஷிவா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மினி மாராத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயம், சான்றிதழ்களை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பா.ஜனதா தலைவர் மோகன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Thank you Daily Thanthi

8 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page