top of page

pensioner-grievance-meeting-at-ooty


ஊட்டியில் ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் நீலகிரி ஊட்டி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஓய்வூதிய இயக்குனர் ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொண்டதற்கான தொகையினை மீள வழங்கக் கோரும் விண்ணப்பங்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டன. மேலும், அவ்விண்ணப்பங்களின் தற்போதைய நிலையினை தெரிந்து கொள்ள ஏதுவாக இணையதள முகவரி ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை உரிய ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல துறை சார்ந்த ஓய்வூதியர்களின் கோரிக்கை மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான தீர்வு வழங்கப்பட்டன. இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) (பொறுப்பு) வாசுகி, கண்ணன் (கணக்குகள்), மாவட்ட கருவூல அலுவலர் சங்கர நாராயணன், யூனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் முதுநிலை கோட்ட மேலாளர் மற்றும் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Thank you Daily Thanthi

8 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page