Traditional food Festival in Breeks School, Ooty, The Nilgiris

ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. நீலகிரி ஊட்டி, துரித உணவுகள் சாப்பிடும் பழக்கத்தால் இளைய தலைமுறையினரின் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இளைஞர்களை பாரம்பரிய உணவு பக்கம் கொண்டு வருவதற்காக, ஊட்டி பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலை பள்ளியில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.

இதற்கு தேசிய பசுமை படை குன்னூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ் தலைமை தாங்கினார். இதில் தேசிய பசுமை படையை மாணவர்கள் தயாரித்த பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. 50-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள், அதன் மருத்துவ குணங்கள், ஊட்டச்சத்துகள் அடங்கிய தகவல்களுடன் பார்வையாளர்களுக்கு விளக்கப்பட்டது.

கண்காட்சியில் தோடர் இன மக்களின் பால் சோறு, படுகர் இன மக்களின் கேழ்வரகு உணவு வகைகள், கேரளா, தமிழக பாரம்பரிய உணவுகள் உளுந்து புட்டு, ராகி புட்டு, சிறுதானிய உப்புமா, மீன் கறி, பச்சைப்பயிறு, கேரட் ஜூஸ், ராகி அடை, கம்பு லட்டு போன்றவை இடம்பெற்று இருந்தது. இந்த உணவுகளின் தரம், பாரம்பரியம், ஊட்டச்சத்து ஆகிய விவரங்களுடன், சிறப்பாக உணவு தயாரித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என பள்ளி தலைமை ஆசிரியர் சரவணகுமார் சந்தர் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை தேசிய பசுமை படை பொறுப்பாசிரியர் சரஸ்வதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
Thank you Daily Thanthi.
www.nammanilgiris.org